எனக்கு உன்னை நேரில் பார்க்க ஆசை, உன்னுடைய அந்த திகைப்பான சிரிப்பை நேரில் காண ஆசை, உன்னுடைய அழகான கண்களிலிருந்து தூசியை ஊதிவிட ஆசை, உன்னிடம் நேரில் மன்னிப்பு கேட்க ஆசை, உன்னுடன் சேர்ந்து அழ ஆசை. இந்த ஆசைகள் வெறும் ஆசைகளாகவே மாறி விடும் என்ற பயம், அந்த பயத்தில் நான் ஒவ்வொரு நாளும் வாழ்கிறேன். உன்னை வெறுக்கவும் முடியவில்லை, மறக்கவும் முடியவில்லை. நீ இல்லாததால் பகலும் இரவாக மாறியது. காதல் பண்ணியது தவறா? நான் தடுமாறியது தவறா? என் வாழ்க்கையில் மறக்க முடியாத காலத்தை எனக்கு தந்தாய். நீ எங்கே இருந்தாலும் சந்தோஷமாக வாழ்க, அமைதியாக வாழ்க, உனக்கு பிடித்த மாதிரி வாழ்க. உன் முகத்தை மறந்துவிட்டேன், உன் குரலை மறந்துவிட்டேன். தொடக்கத்தில் உன்னை சிரிக்க வைத்தேன், ஆனால் இப்போது உன்னை அழ வைத்தேன். என் வாழ்க்கை இந்த பிரபஞ்சத்தில் மிகத் தூரமாக இருந்தது, நீ வந்ததால் நான் உலகத்துக்கு திரும்பி வந்தேன். என்னுடைய இதயம் எப்போதும் உன்னக்காகவே துடிக்கும். எங்கே இருந்தாலும் மகிழ்ச்சியுடன் வாழ்க, கண்மணி. த இலக்கியன்
No comments at this point, please be the first to comment on this post.